close
Choose your channels

சன் டிவி சீரியல் நடிகைக்கு ஆண் குழந்தை.. கணவர் வெளியிட்ட புகைப்படம்!

Wednesday, November 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அவரது கணவர் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்த நடிகை அபிநயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடிக்க தீபக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை அபிநயா  கர்ப்பமாக இருந்தார் என்பதும் அவரது வளைகாப்பு புகைப்படங்கள் சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அபிநயாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தீபக் பதிவு  செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் தீபக் கூறியிருப்பதாவது:

கடவுளின் தயவின் விளைவாக விலைமதிப்பற்ற குழந்தையை பரிசாக பெற்று இருக்கின்றோம். அந்த குழந்தையை செவிலியர் என் கைகளில் வைத்தபோது வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருந்தது’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment