விவாகரத்தாகி 3 வருடங்கள் கழித்து துணையை கண்டுபிடித்துவிட்டேன்: சன் டிவி சீரியல் நடிகை அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடித்த நடிகை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது கணவரை விவாகரத்து செய்த நிலையில் தற்போது புதிய துணையை கண்டுபிடித்துவிட்டேன் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும், அதன் பிறகு விவாகரத்து செய்து வருவதுமான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் ’மகராசி’ என்ற சீரியலில் நடித்த நிவேதிதா என்பவர் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில வருடங்களில் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிவேதிதா விவாகரத்து பெற்று மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இந்த நிலையில் திருமகள் சீரியலில் நிவேதிதா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அதே சீரியலில் நாயகனாக நடித்த சுரேந்திரன் என்பவரை அவர் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் தனது காதலை உறுதி செய்துள்ளார்.
திருமணமான மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஒரு துணையை தேடி கண்டுபிடித்து விட்டேன் என்றும் எனக்கு ஸ்பெஷலான ஒருவருடன் மகிழ்ச்சியாக எனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறேன் என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் சுரேந்திரனுடன் நெருக்கமாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com