காதலியை மணந்தார் சன் டிவி சீரியல் நடிகர்.. சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டதை அடுத்து சின்னத்திரை உலக பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’அபியும் நானும்’ என்ற சீரியலில் குருவி என்ற கேரக்டரில் மிகவும் இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இந்த கேரக்டரில் அவர் சிறப்பாக நடித்ததை அடுத்து குருவி தமிழ்ச்செல்வன் என்றே ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது அவர் ’மிஸ்டர் மனைவி’ மற்றும் ’புது வசந்தம்’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான பூர்ணிமா என்பவரை நேற்று முன்தினம் குருவி தமிழ்ச்செல்வன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு சன் டிவி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் குருவி தமிழ்ச்செல்வன் தன்னுடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

பெங்களூரு தொழிலதிபரை திருமணம் செய்த நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

தமிழ் உள்பட  தென்னிந்திய திரைப்படங்களில் நடித்த நடிகை, பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வார எலிமினேஷன் இவரா? வனிதாவின் பதிவால் பார்வையாளர்கள் குழப்பம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்படுவார் என்ற நிலையில்

கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகிர்தண்டா 2': ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பது  இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்ததோடு

மாறப்போகும் கேப்டன்.. டைட்டில் வின்னருக்கு ஒருவர் கூட ஆதரவு கிடையாதா?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் நிக்சன் கேப்டனாக இருந்து வரும் நிலையில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தி அந்த குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் கேப்டன் பதவியை இழப்பார் என்றும் அதுமட்டுமின்றி

மாயா, தினேஷை கட்டிப்போட்ட கேப்டன்: 'நான்சென்ஸ்' என கத்திய மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உடன் இருப்பவர்களை கயிற்றால் கட்டி போடும் டாஸ்க் இந்த வாரம் நடந்து வரும் நிலையில் நேற்று விஷ்ணு மற்றும் அர்ச்சனா கட்டப்பட்டிருந்தனர்