சன் டிவி சீரியல் நடிகருக்கு இன்று திருமணம்.. மணமகள் யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’அன்பே வா’ என்ற தொடரின் நாயகனுக்கு இன்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்த நிலையில் சின்ன திரையுலகினர் குவிந்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சன் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’அன்பே வா’. இந்த சீரியலின் நாயகன் விராட் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் விராட் என்பவருக்கும் நவீனா என்ற மணப்பெண்ணுக்கும் இன்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமகள் நவீன ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் என்பதும் பல நட்சத்திரங்களுக்கு இவர் மேக்கப் செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளாக நவீனாவை விராட் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு குடும்பத்தாரின் சம்மதத்தின் பேரில் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. ‘அன்பை வா’ தொடரில் வருண் என்ற கேரக்டரின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த விராட் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com