சன் டிவி 'ரோஜா' சீரியல் நடிகைக்கு பெண் குழந்தை: குவியும் வாழ்த்துக்கள்!

  • IndiaGlitz, [Saturday,November 19 2022]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ரோஜா’ சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று ’ரோஜா’ என்பதும், இந்த சீரியலுக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த சீரியலில் அனு என்ற கேரக்டரில் நடித்து வந்த அட்சயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே அட்சயாவுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானார். இந்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் தாயும் சேயும் நலம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன்டிவியில் தொகுப்பாளினியாக தனது மீடியா வாழ்க்கையைத் துவக்கிய அட்சயா அதன் பின் ‘வணக்கம் தமிழா’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் திடீரென அவருக்கு ’ரோஜா’ சீரியலில் நடிக்கத் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அட்சயா, மிகவும் சிறப்பாக நடித்ததால் அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அட்சயாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து சின்னத்திரை பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது பல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அட்சயா பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பாக வளைகாப்பு புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.