சன் டிவி சீரியலில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல வில்லி நடிகை.....!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சைத்ரா ரெட்டி சன் டிவியில் ஒளிபரப்பாகக்கூடிய புதிய சீரியலில் நாயகியாக நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் "கல்யாணம் முதல் காதல் வரை" சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் சைத்ரா ரெட்டி, இதன் பின்பு ஜீ தமிழில் "யாரடி நீ மோகினி" என்ற நாடகம் மூலமாக அழகான வில்லியாக பிரபலமானார். ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த சைத்ராவிற்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் புதிய சீரியலில், சைத்ரா நாயகியாக நடிக்கவுள்ளார். ராஜா ராணி, காற்றின் மொழி போன்ற சீரியல்களில் நாயகனாக அறிமுகமான, நடிகர் சஞ்சீவ் இந்த தொடரில் நாயகனாக களமிறங்க உள்ளார். "கயல்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சீரியலின், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments