நியூஸ் ரீடர் கண்மணியின் வளைகாப்பு நிகழ்ச்சி.. கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் கர்ப்பமான நிலையில் அவரது வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
ஜெயா டிவியில் நியூஸ் ரீடராக தனது பயணத்தை தொடங்கிய கண்மணி அதன் பின்னர் பலர் தனியார் தொலைக்காட்சிகளில் பணியாற்றினார். தற்போது அவர் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் நிலையில் அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது. அவர் அணியும் உடைகள் மற்றும் அணிகலன்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நியூஸ் ரீடர் கண்மணி ’இதயத்தை திருடாதே’ சீரியல் நாயகன் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் வருகை தந்து இருந்தனர் என்பதும் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகின என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கண்மணி சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக நவீன தெரிவித்திருந்த நிலையில் தற்போது 9 மாதம் ஆகிவிட்டதால் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் மேடையில் மனைவிக்காக ஸ்பெஷல் கேக் ஒன்றை நவீன் பரிசாக கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments