சன் டிவியில் விரைவில் புதிய சீரியல்.. ஹீரோயின் இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Monday,July 01 2024]

சன் டிவியில் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஆரம்பமாகி கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, புரமோ வீடியோ வெளியாகி இருப்பதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் கடந்த சில மாதங்களாக புத்தம் புதிய தொடர்கள் ஆரம்பமாகி வருகிறது என்பதும் இதனால் சீரியல் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சன் டிவியில் தற்போது ’மணமகளே வா’ என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோ வீடியோவும் வெளியாகி உள்ளது. இந்த சீரியல் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள சீரியல் என்று கூறப்படும் நிலையில் இந்த சீரியலில் நாயகியாக ஹரிகா சாது நடித்துள்ளார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான ’திருமகள்’ என்ற சீரியலில் நாயகி ஆக நடித்திருந்தார் என்பதும் இந்த சீரியல் 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை பிரபலமாக ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ள ஹரிகா சாது தற்போது மீண்டும் தமிழில் ’மணமகளே வா’ என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார்

இந்த சீரியல் புரமோ வீடியோவில் தனது வீடு தான் சொர்க்கம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகிக்கு தனக்கு தந்தை ஒரு பிரச்சனையில் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து அந்த பிரச்சனையை அவர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்ற கதை அம்சம் கொண்டது என்பது முன்னோட்ட வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

சன் டிவியின் மற்ற சீரியல் போலவே இந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சீரியல் தொடங்கும் தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.