close
Choose your channels

'குக் வித் கோமாளி'க்கு போட்டியாக சன் டிவி நிகழ்ச்சி.. விஜய் டிவி பிரபலங்களை இழுத்துவிட்ட வெங்கடேஷ் பட்..!

Monday, April 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் இரண்டு எபிசோடுகளும் கலகலப்பாகவும் சூப்பரான இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் சன் டிவியில் அதே போன்ற ஒரு நிகழ்ச்சி தொடங்க இருப்பதாக முன்னோட்ட வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக கடந்த நான்கு சீசன்களில் இருந்தவர் வெங்கடேஷ் பட் என்பதும் ஐந்தாவது சீசனில் அவர் விலகி விட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில் சன் டிவியில் ஒரு புதிய நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பதாக கூறப்பட்டது. நேற்று கூட அவர் சன் டிவியில் இந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ வெளிவரும் என்று கூறியிருந்த நிலையில் நேற்று வெளியான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி, கிட்டத்தட்ட குக் வித் கோமாளி போன்ற ஒரு கலகலப்பான நிகழ்ச்சி என்பதும் இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் பிரபலமாக இருந்த மோனிஷா, பரத், தீபா உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கும் காட்சிகள் முன்னோட்ட வீடியோவில் உள்ளன.

குக் வித் கோமாளி கான்செப்ட் போலவே முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வெங்கடேஷ் பட் இருக்கிறார் என்பது இந்த முன்னோட்டம் வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது. ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற டைட்டிலில் விரைவில் சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment