close
Choose your channels

சன் டிவியின் பிரபல 2ஆம் பாக தொடர் முடிவுக்கு வருகிறதா?  கிளைமாக்ஸ் படப்பிடிப்பு..!

Wednesday, October 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல இரண்டாம் பாகம் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாகவும், இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், டிஆர்பியில் இந்த இரண்டு தொலைக்காட்சி தொடர்களுக்கு தான் போட்டிகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சன் டிவியில் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற தொடர்களில் ஒன்று "சுந்தரி". இந்த தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதே நடிகர்களை கொண்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும், இரண்டாம் பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

முதல் பாகத்தில் கணவனால் ஏமாற்றப்பட்ட கிராமத்து பெண் போராடி கலெக்டர் ஆகிறார். இரண்டாம் பாகத்தில் கலெக்டர் ஆன பின், கணவரின் மற்றொரு மனைவி குடும்பத்தை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாரமும் முதல் 10 இடங்களுக்குள் "சுந்தரி" தொடர் டிஆர்பியில் இடம் பெற்று வரும் நிலையில், தற்போது இந்த தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து "சுந்தரி 2" விரைவில் முடியும் என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment