லைகா நிறுவனத்தின் அடுத்த படத்தை வாங்கிய சன் டிவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படத்தை சன் டிவி சாட்டிலைட் உரிமையை பெற்று இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’பொன்னியின் செல்வன்’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படங்களில் ஒன்று ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’.
வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை சுராஜ் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் திரையரங்கில் வெளியான பின்னர் இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன்டிவி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வடிவேலு, ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், ஷிவானி நாராயணன், ஆர்ஜே விக்னேஷ், சஞ்சனா சிங், உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Happy to announce #NaaiSekarReturns ???? Satellite & Streaming rights have been acquired by @SunTV ?? & @Netflix_INSouth ?? respectively!
— Lyca Productions (@LycaProductions) November 29, 2022
Vaigai Puyal #Vadivelu ??️ @Director_Suraaj ?? @Music_Santhosh ?? @thinkmusicindia ?? @gkmtamilkumaran ?? @LycaProductions #Subaskaran ?? pic.twitter.com/vpMBcRksQN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments