close
Choose your channels

டிஆர்பியில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி தொடர்.. பின்னுக்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'..!

Saturday, October 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார டி.ஆர்.பியில் டாப் 5 இடங்களில் சன் டிவி தொடர்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதல் இடத்தில் வழக்கம் போல் "கயல்" சீரியல் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் "சிங்க பெண்ணே" சீரியல் உள்ளது. இந்த நிலையில், சன் டிவியின் "மூன்று முடிச்சு" மூன்றாவது இடத்தையும் அதேபோல், ’மருமகள்" சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஐந்தாவது இடத்தில் "சுந்தரி" சீரியல் பிடித்துள்ளது.

கடந்த பல வாரங்களாக முதல் ஐந்து இடத்திற்குள் வந்த விஜய் டிவியின் "சிறகடிக்க ஆசை" சீரியல், சில வாரங்கள் முதல் இடத்தில் கூட இருந்தது. ஆனால், தற்போது இந்த சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு டி.ஆர்.பியில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, ரோகிணிக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்து முத்து மற்றும் மீனாவின் கதாபாத்திரங்கள் டம்மியாக்கி வருவது தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் டிவியின் இன்னொரு தொடரான "பாண்டியன் ஸ்டோர்" ஏழாவது இடத்தையும், அதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "ராமாயணம்" எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் "பாக்கியலட்சுமி" மற்றும் "ஆஹா கல்யாணம்" சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வார ரேட்டிங் இவ்வாறு இருக்கும் நிலையில், அடுத்த வாரம் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment