டிஆர்பியில் டாப் இடங்களை பிடித்த சன் டிவி தொடர்.. பின்னுக்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'..!

  • IndiaGlitz, [Saturday,October 05 2024]

சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வார டி.ஆர்.பியில் டாப் 5 இடங்களில் சன் டிவி தொடர்கள் இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

முதல் இடத்தில் வழக்கம் போல் கயல் சீரியல் இருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் உள்ளது. இந்த நிலையில், சன் டிவியின் மூன்று முடிச்சு மூன்றாவது இடத்தையும் அதேபோல், ’மருமகள் சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ள நிலையில், ஐந்தாவது இடத்தில் சுந்தரி சீரியல் பிடித்துள்ளது.

கடந்த பல வாரங்களாக முதல் ஐந்து இடத்திற்குள் வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல், சில வாரங்கள் முதல் இடத்தில் கூட இருந்தது. ஆனால், தற்போது இந்த சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு டி.ஆர்.பியில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக, ரோகிணிக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுத்து முத்து மற்றும் மீனாவின் கதாபாத்திரங்கள் டம்மியாக்கி வருவது தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் டிவியின் இன்னொரு தொடரான பாண்டியன் ஸ்டோர் ஏழாவது இடத்தையும், அதனை அடுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் பாக்கியலட்சுமி மற்றும் ஆஹா கல்யாணம் சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த வார ரேட்டிங் இவ்வாறு இருக்கும் நிலையில், அடுத்த வாரம் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

15 ஆண்டுக்கு பின் ஜீவாவுக்கு ஒரு 2ஆம் பாக படம்.. ஆனால் இது நடக்குமா?

ஜீவா நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான நிலையில், 15 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்தி கசிந்துள்ளது.

ஜெயம் ரவியின் 34வது பட அறிவிப்பு..! இயக்குனர், இசையமைப்பாளர் யார் யார்?

நடிகர் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 34-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து, இது குறித்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வனிதா விஜயகுமார் - ராபர்ட் மாஸ்டர் சேர்வது உண்மைதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னால் வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்த புகைப்படம் வெளியாகி, அக்டோபர் ஐந்தாம் தேதி இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினியின் 'வேட்டையன்' படத்துடன் மோதும் தமிழ்ப்படம் இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக

ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என எனக்கு முன்பே தெரியும்: லோகேஷ் கனகராஜ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அனுமதிக்கப்படுவார் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.