கட்டிப்பிடிக்கும் கணவர், கர்ப்பமானதை அறிவித்த சன் டிவி தொகுப்பாளினி!

  • IndiaGlitz, [Monday,May 30 2022]

சன் டிவியின் பிரபல தொகுப்பாளினி ஒருவர், தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

சன் டிவியில் பிரபலமான ’கிரேசி கண்மணி’ ’சுடச்சுட சென்னை’ ’கால் மேல காசு’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தியா மேனன். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் தியா, தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் தன்னை தனது கணவர் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் வர இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.