மறைந்த ஆனந்த கண்ணன் பிறந்த நாள்.. மறக்காமல் வாழ்த்து சொன்ன சன் டிவி பிரபலம்..!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

சன் டிவியில் ஆங்கராக இருந்த ஆனந்த கண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமான நிலையில் இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சன் டிவி பிரபலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

கடந்த 90களில் பிரபல தொகுப்பாளராக இருந்த ஆனந்த கண்ணன் என்பவர் சிங்கப்பூரை சேர்ந்த தமிழர். இவர் எப்எம் ரேடியோ, வசந்தம் டிவி உள்ளிட்டவற்றில் வேலை பார்த்த நிலையில் சன் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கினார் என்பதும் அது மட்டும் இன்றி ’சிந்துபாத்’ உள்பட சில நாடகங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

90ஸ் கிட்ஸ்களின் பிரபலமாக இருந்த இவர் திடீரென தமிழகத்திலிருந்து சொந்த ஊரான சிங்கப்பூர் சென்றார். அங்கு அவர் மேடை நாடகங்கள், தெருக்கூத்துகள் ஆகியவற்றை பயிற்றுவிக்கும் பள்ளியை நடத்தி வந்தார் என்பதும், அதில் சுமார் 80 ஆயிரம் குழந்தைகள் பயின்றதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குடல் புற்றுநோய் காரணமாக காலமான நிலையில் இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை மறக்காமல் ஞாபகம் வைத்து சன் மியூசிக் தொகுப்பாளினி அனுஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.