கணீர் குரலில் செய்தி வாசித்த சன் டிவி பிரபலம் காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சன் டிவியில் தனது கணீர் குரலால் செய்தி வாசித்த செய்தி வாசிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.

சன் டிவியில் தனது கணீர் குரலில், அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் செய்தி வாசித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் இருந்தவர் சண்முகம். மதுரையைச் சேர்ந்த இவர் பத்திரிக்கை நிருபராக தனது பணியை தொடங்கிய நிலையில் சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இணைந்தார். கடந்த 90ஆம் ஆண்டுகளில் இவரது கணீர் குரலில் அழகிய தமிழில் தெளிவாக, நிதானமாக வாசிக்கப்பட்ட செய்தி மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென செய்தி வாசிப்பாளர் சண்முகம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சண்முகம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

தனது தனித்த குரல்வளத்தால் தமிழ் இல்லங்கள் தோறும் எதிரொலித்த ஊடகவியலாளர் . சண்முகம் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். கால் நூற்றாண்டுக்கும் மேலான தனது ஊடகப் பயணத்தில், கணீர் குரல் - ஒழுங்கான வாசிப்பு - துல்லியமான உச்சரிப்பு என்று, செய்தி வாசிப்பில் அவர் இலக்கணமாய்த் திகழ்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.

அவரது மறைவு ஊடக உலகிற்குப் பேரிழிப்பு. அவரது பிரிவால் வாடும் ஊடக நண்பர்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

More News

காருக்குள் இருக்கும்போது இதைமட்டும் தயவு செய்து செய்யாதீங்க.. '96' நடிகை வேண்டுகோள்!

காருக்குள் இருக்கும் போது தயவு செய்து இதை மட்டும் செய்ய வேண்டாம் என விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை வர்ஷா பொம்மலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்! எதற்கு தெரியுமா?

திருமண நேரத்தில் மணமகன் நண்பர்கள் திடீரென மணமகளிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவம் உசிலம்பட்டி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய டைட்டில்: சிம்பு அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'

'மிஸ் யூ': திருமணமான ஒரே வாரத்தில் வேதனையான பதிவு செய்த புகழ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கும் புகழ் கடந்த வாரம் நீண்ட நாள் காதலியான பென்சியாவை திருமணம் செய்துகொண்டார்

வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வனை அடுத்து இன்னொரு பிரமாண்ட விழா: கலைப்புலி எஸ் தாணு தகவல்

சமீபத்தில் சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்ததே.