'2.0' சிட்டிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட'

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் நடக்கின்றது. நாளை உலகம் முழுவதும் '2.'0' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் 'பேட்ட' படக்குழு, '2.0' படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள ஒரு டுவீட்டில் '2.0' திரைப்படம் வெற்றிப்படமாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் இந்த டுவீட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு புகைப்படத்தில் '2.0' சிட்டியும், பேட்ட ரஜினியும் இருப்பது போல் உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இந்த வாழ்த்துக்கு '2.0' பட நிறுவனமான லைகா நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஐஸ்வர்யாவை அடுத்து மகத்துடன் ஜோடி சேர்ந்த யாஷிகா

பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது இணைபிரியாத தோழிகளாக மாறிவிட்ட ஐஸ்வர்யா தத்தா மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் திரையுலகில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

ஜெர்மனியில் அஜித் முக்கிய ஆலோசனை: வைரலாகும் புகைப்படங்கள்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் ஒருபக்கம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் அவர் நடிக்கவுள்ள

'தளபதி 63' படத்தின் கனவு நாயகியின் பரபரப்பான கருத்து

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் நாயகியாக 'கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடக்க விழாவில் அசத்திய ஏ.ஆர்.ரஹ்மான்

உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி இன்று முதல் தொடங்குகிறது. ஏ,பி,சி,டி என 4 பிரிவுகளில் மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்ளவுள்ளன. இந்திய ஹாக்கி அணி சி பிரிவில் இடம்பெற்றுள்ளது.

மன்னிப்பு கேட்க சொல்வதுதான் ஜனநாயகமா? 'சர்கார்' விவகாரம் குறித்து கமல்

தளபதி விஜய் நடித்த 'சர்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்ததை அடுத்து அந்த படத்தின் இயக்குனர்