'தலைவர் 171' படத்தின் மாஸ் அறிவிப்பு.. சன்பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாக இருப்பதை அடுத்து ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் ’வேட்டையன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் போஸ்டர் ஏப்ரல் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த படம் குறித்த அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டரில் ரஜினிகாந்த் கையில் விலங்கு இருப்பது போல் ஸ்டைலிஷ் போஸ் உள்ளது. மேலும் பின்னணியில் காலச் சக்கரங்கள் போன்றவை இருப்பதை பார்க்கும் போது இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் வித்தியாசமாக ஏதோ சொல்ல வருகிறார் என்பது தெரிய வருகிறது
அனிருத் இசையில் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்கத்தில் இந்த படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஏப்ரல் 14 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய இரண்டு நாட்களில் நான் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரட்டை விருந்துகள் கிடைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The much awaited #Thalaivar171 update is here!
— Sun Pictures (@sunpictures) March 28, 2024
Title revealing teaser from April 22nd 💥 @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv pic.twitter.com/vpquKyetp8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com