தனுஷ் கேரக்டர் இதுதான்: 'திருச்சிற்றம்பலம்' அப்டேட் தந்த சன் பிக்சர்ஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்து அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
முதல் கட்டமாக ராஷிகண்ணா அனுஷா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர், சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில் சற்று முன் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக தெரிகிறது.
The wait is over! Meet @dhanushkraja in and as #Thiruchitrambhalam@anirudhofficial @MithranRJawahar @prakashraaj #Bharathiraja @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @omdop @editor_prasanna @jacki_art @theSreyas @kavya_sriram @kabilanchelliah pic.twitter.com/9ufi7WdL3J
— Sun Pictures (@sunpictures) June 11, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments