தனுஷ் கேரக்டர் இதுதான்: 'திருச்சிற்றம்பலம்' அப்டேட் தந்த சன் பிக்சர்ஸ்

  • IndiaGlitz, [Saturday,June 11 2022]

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்து அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

முதல் கட்டமாக ராஷிகண்ணா அனுஷா என்ற கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர், சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில் சற்று முன் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை 1ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக தெரிகிறது.

More News

'விக்ரம்' படத்தின் 8 நாள் வசூல் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் கோலிவுட்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான நிலையில் இந்த படம் ரிலீசாகி நேற்றுடன் எட்டு நாட்கள் முடிவடைந்துள்ள

சூர்யாவின் திடீர் வெளிநாட்டு பயணம்: காரணம் இதுதான்

தமிழ் திரையுலகில் பிசியான ஹீரோக்களில் ஒருவரான சூர்யா திடீரென தனது குடும்பத்துடன் வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ரோலக்ஸ் சார்' தோற்றத்திற்கு இவர் தான் காரணம்: சூர்யா வெளியிட்ட ரகசியம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்,

விக்னேஷ் சிவன் - நயன்தாரா செய்தியாளர் சந்திப்பு: என்ன சொன்னாங்க தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணத்திற்கு மறுநாள் இந்த தம்பதிகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு

உலகப்புகழ் பெற்ற பாடகருக்கு பக்கவாதம்… ரசிகர்களைப் பதற வைக்கும் தகவல்!

கனடாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் ஃபைபர் தனக்கு முகப் பக்கவாத நோய் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி வீடியோ