close
Choose your channels

தனுஷின் அடுத்த படம் குறித்த ஆச்சரிய அறிவிப்பு

Sunday, December 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக உள்ள ’தலைவர் 168’ என்ற படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி அறிவிப்பாக தனுஷின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் 44 வது படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் தனுஷ் படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment