விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை தயாரிக்கும் ரஜினி-விஜய் தயாரிப்பு நிறுவனம்!

  • IndiaGlitz, [Tuesday,December 31 2019]

விஜய் சேதுபதி தற்போது விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ உள்பட சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து தனுஷ் நடிக்கவிருக்கும் 44வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்படும் என்றும் இந்த படத்தை தனுஷே இயக்குகிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட இந்தப் படம் காமெடியுடன் கூடிய ரொமான்ஸ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.

More News

நடிகரை சுத்தியலால் அடித்து கொலை செய்த நடிகை: சென்னையில் விபரீதமான கள்ளக்காதல்: 

கள்ளக்காதல் விபரீதம் ஆனதால் துணை நடிகர் ஒருவரை துணை நடிகை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது

தேவதாசி விவகாரம்: தாயாருக்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயி

சமீபத்தில் பாடகி சின்மயியின் தாயார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோது தேவதாசி முறையை தான் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.

இசைஞானிக்கு இணையான இசைக்கலைஞன் இல்லை: பாரதிராஜா புகழாராம்

இளையராஜாவும் பாரதிராஜாவும் கடந்த சில ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்திருந்தாலும் சமீபத்தில் அவர்கள் சமாதானம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300..!

உத்திரபிரதேசத்தில் ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை பைக்கில் அழைத்துச் சென்றவருக்கு அபராதம் ரூ.6300.