close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ’நம்ம வீட்டு பிள்ளை’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. நீண்ட இடைவெளிக்குப்பின் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த சூப்பர்ஹிட் வெற்றி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கி வரும் ’டாக்டர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிகிறது.

இந்த நிலையில் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ’நம்ம வீட்டு பிள்ளை’ போலவே இந்த படமும் குடும்ப சென்டிமென்ட் கலந்த திரைப்படம் என்றும் இந்த படத்தின் இயக்குனர் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.