சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 4 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருக்கும் 4 நட்சத்திரங்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
அதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகர் ஆகிய நால்வர் இந்தப் படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கண்ட நால்வரும் இந்த படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமன்னா, பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியான நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The cast of #Jailer??
— Sun Pictures (@sunpictures) August 24, 2022
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments