சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் பட ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,September 01 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜித், சூர்யா மற்றும் தனுஷ் நடிக்கும் படங்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அறிவித்த அறிவிப்பின்படி இந்த படம் வரும் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் சூர்யா நடித்துவரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தை வரும் டிசம்பர் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து இந்த படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தனுஷ் நடித்து வரும் ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருவதை அடுத்தே இந்த படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.