சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா அறிவிப்பு என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை காலை 11.07 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சன் பிக்சர்ஸின் இந்த மெகா அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை தயாரித்து வருகிறது. எனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது
அதேபோல் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவின் படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதால் இந்த இரண்டு படங்களில் ஒன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எனவே நாளை வெளியாகும் அறிவிப்பு ரஜினி, விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் எந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் அல்லது நான்கு அறிவிப்புகளும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
?? Mega Announcement coming up!??
— Sun Pictures (@sunpictures) December 10, 2020
Can you guess when? pic.twitter.com/WDKkqYhS9u
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com