சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மெகா அறிவிப்பு என்ன? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

  • IndiaGlitz, [Thursday,December 10 2020]

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் மெகா அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது. நாளை காலை 11.07 மணிக்கு இந்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சன் பிக்சர்ஸின் இந்த மெகா அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை தயாரித்து வருகிறது. எனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது

அதேபோல் ’தளபதி 65’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதால் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பும் உள்ளது. மேலும் தனுஷ் மற்றும் சூர்யாவின் படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதால் இந்த இரண்டு படங்களில் ஒன்றின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே நாளை வெளியாகும் அறிவிப்பு ரஜினி, விஜய், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்களில் எந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் அல்லது நான்கு அறிவிப்புகளும் வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சிங்களுக்கும் கொரோனா பாதிப்பா??? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸின் மரபணுவில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக என விஞ்ஞானிகள் தொடர்ந்து அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 5 நிமிஷத்துல கொரோனா கண்டறியும் முறை… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக வெறும் 5 நிமிடத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியும் சோதனை முறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சித்ரா தற்கொலை வழக்கில் சிக்கிய சிசிடிவி காட்சிகள்: விசாரணையில் திருப்பம் ஏற்படுமா?

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தான் தங்கியிருந்த சொகுசு அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னத் திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

கோலிவுட் திரையுலகில் காதலர்களாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள்

அவன் எல்லாம் ஒரு ஆளு: அர்ச்சனாவுக்கு ஒரு குறும்படம் உண்டா கமல் சார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் தொடங்கிய புதிய மனிதா என்ற டாஸ்க்கில் தனது அப்பா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூறி தன்னை மனவருத்தம் செய்துவிட்டதாக நிஷா மீது குற்றஞ்சாட்டி