சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்': சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அப்டேட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் தீம் மியூசிக்கை வெளியிட்டுள்ளது. அனிருத் அட்டகாசமாக கம்போஸ் செய்த இந்த தீம் மியூசிக் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் தமன்னா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
#JailerTheme music now streaming! ??
— Sun Pictures (@sunpictures) September 7, 2022
?? https://t.co/C3W5imlfDn@rajinikanth @anirudhofficial @Nelsondilpkumar #Jailer pic.twitter.com/fkExez3dg3
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com