close
Choose your channels

'பேட்ட'யை அடுத்து சன்பிக்சர்ஸின் அடுத்த பட ரிலீஸ் தகவல்

Thursday, December 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசரும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அடுத்த படமான 'காஞ்சனா 3' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, கபீர்சிங் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ளார் வெற்றி ஒளிப்பதிவில் எஸ்.தமன் இசையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment