ரஜினி, நெல்சன், அனிருத் உடன் முடியவில்லை.. 300 பேர்களுக்கு பரிசு கொடுத்த 'ஜெயிலர்' தயாரிப்பாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில், உருவான திரைப்படம் ‘ஜெயிலர்’.
இந்த படம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் திரையரங்குகளில் உலகம் முழுவதும் இந்த படம் 600 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் லாபத்தின் ஒரு பகுதியை ரஜினிக்கு கொடுத்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு ஆடம்பர சொகுசு காரையும் பரிசளித்தார். அதேபோல் நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய இருவருக்கும் கார் பரிசளித்த நிலையில் தற்போது நேற்று நடந்த ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றி விழாவில் இந்த படத்தில் பணிபுரிந்த 300 பேருக்கு தங்க காசுகள் உடன் கூடிய சிறப்பு பரிசு வழங்கி உள்ளார்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த படத்தில் கிடைத்த லாபத்தின் சில கோடிகளை மருத்துவமனைகளுக்கு கொடுத்து உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr.Kalanithi Maran felicitated more than 300 people who worked for #Jailer with gold coins today. #JailerSuccessCelebrations pic.twitter.com/qEdV8oo6dB
— Sun Pictures (@sunpictures) September 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com