நோட்டீஸ் எதிரொலி: 'சர்கார்' படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Friday,July 06 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 21ஆம் தேதி வெளிவந்தது. இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் புகைப்பது போன்ற போஸில் இருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களின் பேராதரவை பெற்றபோதிலும் புகை பிடிக்கும் போஸ்டருக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி, இந்த போஸ்டரை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படகுழுவினர்களுக்கு இன்று தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸில் ‘சர்கார்’ படத்தின் போஸ்டரில், விஜய் புகைப்பிடிப்பதுபோல் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இந்த நோட்டீஸ் எதிரொலியாக விஜய் புகைப்பது போன்று வெளியிட்ட சர்கார் பட போஸ்டர்களையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

More News

பாரதிராஜா மகன் மீது திடீர் வழக்குப்பதிவு: காரணம் என்ன தெரியுமா?

இயக்குனர் இமயம் பாரதிராஜா மீது தமிழக காவல்துறை பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. அவரும் ஒருசில வழக்குகளில் முன் ஜாமீன் பெற்று வழக்கை சந்தித்து வருகிறார்.

'சாமி 2' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'சாமி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஆரம்பமாகியுள்ளது.

அப்போதான் இவ பெரிசா வெடிக்க வைப்பா: வைஷ்ணவியை கலாய்த்த டேனி

பிக்பாஸ் வீட்டின் தலைவியாக வைஷ்ணவி கடந்த திங்கள் முதல் இருக்கின்றார். ஒரு தலைமைக்குரிய பண்பு சிறிதும் இல்லாத இவரை எப்படி தலைவராக ஏற்றுக்கொள்வது

பிரபுதேவாவுக்கு வில்லனாகும் 'பாகுபலி' பட நடிகர்

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படத்தில் காளகேயா மொழியில் பேசி கொடூரமான வில்லனாக நடித்திருந்தவர் பிரபாகர் என்ற நடிகர். இந்த படத்தில் இவருடைய தோற்றமும் இவர் பேசும் வசனமும் பயங்கரமாக இருக்கும்

மக்கள் நீதி மய்யமா? மாமா நீதி மய்யமா?: இந்து முன்னணி கட்சி ஆவேசம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களின் ஆதரவை பெற்றுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்