ரஜினியின் 'ஜெயிலர்' படத்தின் சூப்பர் அப்டேட்.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,May 04 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சற்று முன்னாள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ‘ஜெயிலர்’ படத்தின் அப்டேட் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தான் இன்று அறிவிக்கப்படும் என்று ரஜினிகாந்த் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, மோகன்லால் உட்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர்.

More News

ஆர்ப்பாட்டமில்லாத அழகினால் ரசிகர்களைக் கட்டிப்போட்ட நடிகை த்ரிஷா… பிறந்தநாள் இன்று!

தனது ஆர்ப்பாட்டமில்லாத அழகினாலும் ஸ்டைலான நடிப்பினாலும் தமிழ் ரசிகர்களை கிட்டத்தட்ட 24 வருடங்களாகக் கட்டிப்போட்டு வைத்திருப்பவர்தான் நடிகை த்ரிஷா.

ரூ.200 கோடியா? பிரமிக்க வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் நெக்லஸ் பற்றிய தகவல்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படுகிற நடிகை பிரியங்கா சோப்ரா

காஷ்மீர் சென்றது 'SK21' படக்குழு.. இனி வேற லெவலில் படப்பிடிப்பு..!

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21வது திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் வெளியாகி

எனக்கா ஃபேர்வெல்? ஓய்வு குறித்து டோனியின் கருத்தால் உற்சாகத்தில் மிதக்கும் ரசிகர்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தத்துப்பிள்ளையான டோனியின் ஓய்வுக் குறித்த பயத்தில்

அந்த கேமிராமேன் வேலை கொஞ்சம் கிடைக்குமா? ரைசா வில்சன் பீச் போட்டோஷூட்டிற்கு நெட்டிசன்கள் கமெண்ட்..!

நடிகை ரைசா வில்சனின் போட்டோஷூட் பீச்சில் நடைபெறும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி இருக்கும் நிலையில் அந்த கேமராமேன் வேலை தங்களுக்கு கிடைக்குமா? என பலர் காமெடியாக கமெண்ட்ஸ் பதிவு செய்து