close
Choose your channels

விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்!

Saturday, August 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்துவரும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தில் நடித்து வரும் நட்சத்திரங்கள் குறித்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து வருகிறது.

சற்றுமுன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து விஜய் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘பீஸ்ட்’ படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் லிலிபுத் ஃபரூக் ஆகியோர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் தமிழ் திரையுலகின் காமெடி நடிகர்கள் என்பது அறிந்ததே. அதேபோல் லிலிபுத் ஃபரூக் பாலிவுட்டில் பிரபல காமெடி நடிகர் என்பதும் இவர் கமல்ஹாசன் நடித்த பாலிவுட் திரைப்படமான ’சாகர்’ உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடும் அடுத்த அப்டேட் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment