'ஜெயிலர்' டிரைலர் ரிலீஸ் தேதி.. சூப்பர் அறிவிப்பு வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி மோகன்லால், சிவராஜ்குமார் உள்பட மல்டி ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜெயிலர்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ’ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் விரைவில் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
’ஜெயிலர்’ திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் ’லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம் என்றும் காத்திருந்தது போதும் என்றும் நாளை ட்ரெய்லர் ரிலீஸ் ஆக இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஜினி ரசிகர்கள் நாளை வெளியாக இருக்கும் ட்ரைலரை மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Late ah vandhalum latest ah varuvom… The wait is over! It's time for his arrival😎 #JailerShowcase Releasing Tomorrow 💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/BobmFJ4oGV
— Sun Pictures (@sunpictures) August 1, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com