'அண்ணாத்த' படத்தின் முதல் விமர்சனம்: சொன்னது யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் காப்பி தயாராகி விட்டதாகவும் இதனை ரஜினிக்கு சமீபத்தில் சிறுத்தை சிவா போட்டு காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை பார்த்து ரஜினி என்ன கூறுவார் என்ற எதிர்பார்ப்பில் சிறுத்தைசிவா இருந்தபோது இந்த படத்தை முழுவதுமாக பார்த்த ரஜினிகாந்த், சிறுத்தை சிவாவிடம் பாராட்டு தெரிவித்ததாகவும், ’கண்டிப்பாக இந்த படம் அனைவரையும் கவரும் என்றும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களை கவரும் என்றும் அடித்துக் கூறினாராம்.

ரஜினியின் இந்த விமர்சனத்தால் இயக்குனர் சிறுத்தை சிவா குஷியாகி உள்ளதாக கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் சப்ஜெக்ட் படம் என்றும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் படக்குழுவினர் தற்போது தங்களது நம்பிக்கையை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்து வருகிறார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.