Sun Pictures acquires 'Endhiran' (Tamil)
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மிகப்பெரிய மீடியா நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (ரோபோ) திரைபடத்தை தயாரிப்பதாக இன்று அறிவித்தது 'எந்திரன் ' இந்தியாவிலேயே பெரும் பொருட்செலவில் உருவாகும் மாபெரும் திரைபடம் பிரமாண்டம், புதுமை, உருவாகும் விதம் என அத்தனை விதத்திலும் மிகப்பெரிய படமாகும். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மெஹா அக்ஷ்ன் திரைப்படம். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை சங்கர் இயக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ரஜினிகாந்துடன் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் ஓர் அங்கமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரிக்கிறது .கிராபிக்ஸ் காட்சிகள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் சண்டை காட்சிகள் இதுவரை பார்த்திராத வகையில் புதுமையானதாக இருக்கும்.
உலகத் தரத்தில் உருவாகும் இந்த படத்தில் ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் பணிபுரிகின்றனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், மற்றும் சன் பிக்சர்ஸ் இயக்குநர் கலாநிதிமாறன் ஆகியோர் முன்னிலையில் எந்திரன் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது பற்றி அதன் பொது செயல் அதிகாரி W.ஸன்ஸ்ராஜ் சக்சேனா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவிக்கையில்" இந்தியாவின் மிகப்பெரிய படம்.திரு கலாநிதிமாறன் அவர்கலுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்
Follow us on Google News and stay updated with the latest!
-
Contact at support@indiaglitz.com
Comments