ரூ.600 கோடி முதலீடு செய்யும் சன் நெட்வொர்க்: சினிமா ரசிகர்களுக்கு விருந்து!
- IndiaGlitz, [Friday,November 27 2020]
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சன் நெட்வொர்க் ரூபாய் 600 கோடி முதலீடு செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் சினிமா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்
சன் நெட்வொர்க் நிறுவனம் ரூபாய் 400 கோடியை சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும், ரூபாய் 200 கோடியை சன் நெக்ஸ்ட் நிறுவனத்திற்கும் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 65’, தனுஷ் நடிக்கும் ஒரு படம், சூர்யாவின் அடுத்த படம் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது மேலும் 400 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் இந்த பணத்தில் பிரபல நடிகர்களின் படங்களை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது
அதேபோல் சன் நெக்ஸ்ட் ஓட்டிட்டு தளத்திற்காக எக்ஸ்க்ளுசிவ் திரைப்படங்களை தயாரிக்கவும் சன் நெட்வொர்க் முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக ரூபாய் 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக சன் நெட்வொர்க் நிறுவனம் ரூபாய் 600 கோடி ஒதுக்கி உள்ளதாக வெளியான தகவலால் சினிமா ரசிகர்களுக்கு அடுத்தடுத்து திரை விருந்துகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது