சன் மியூசிக் தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஒருவரின் மகனுக்கு 10வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி. அதன்பின்னர் அவர் விஜய் டிவியில் ’அசத்தப்போவது யாரு’ உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் அவர் தாயுமானவன், புதுக்கவிதை உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் ’குயில்’, மந்திரப்புன்னகை’, ‘சென்னை 28- 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் சமீபத்தில் தனது மகனின் பத்தாவது பிறந்த நாளை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ’உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்

மகேஸ்வரி பதிவு செய்த வீடியோவில் ‘ஜெயம் ரவி நடித்த ‘டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற ‘குறும்பா’ பாடல் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மகேஸ்வரி ஜீ தமிழில் பேட்டராப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.