வெயில்ல போய் நில்லுங்க.. வைரஸ் செத்துவிடும்..! மத்திய சுகாதார இணை அமைச்சர் சர்ச்சை.
- IndiaGlitz, [Thursday,March 19 2020]
வெயிலில் இரண்டு மணிநேரம் நின்றால் உடலுக்கு கிடைக்கும் விட்டமின் டி மூலம் வைரஸ் இறந்துவிடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி, அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த வைரஸ் பரவலை தடுக்க போராடி வருகின்றன. உலகம் முழுக்க இருக்கும் மக்களுக்கு வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சொல்லப்பட்டு வருகின்றன.
வதந்திகளை நம்ப வேண்டாம். அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவரை சந்தித்து சிகிச்சை பேரருட் கொள்ள மக்களுக்கு அரசானது தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருந்தாலும் சமூக வலைதளங்களில் பல சுய வைத்தியங்கள் பரவி வருகின்றன. மாட்டுக் கோமியத்தை மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தாக கொடுத்து, அதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே வெயிலில் 2 மணி நேரம் நிற்கும் போது உடலில் உருவாக்கும் விட்டமின் டி வைரசைக் கொல்லும் என தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.