மக்களவை தேர்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு கோடைவிடுமுறை அதிகரிப்பு
- IndiaGlitz, [Saturday,March 16 2019]
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவை வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அதற்கு முன்னரே அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்னரே தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி முதலே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள், ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என்பதால் இந்த ஆண்டு 50 நாட்கள் கோடை விடுமுறை கிடைக்கும்.
50 நாட்களுக்கு பின் ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றைய தினமே புதிய பாடத்திட்டத்துக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.