'சும்மா கிழி' செய்த புதிய சாதனை: அனிருத் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டப்பிங் பணியை சமீபத்தில் ரஜினிகாந்த் முடித்த நிலையில் மற்ற நட்சத்திரங்கள் தற்போது டப்பிங் பணிகள் செய்து வருவதாகவும், இன்னொரு பக்கம் இந்த படத்தின் பின்னணி இசை பணிகளை இசையமைப்பாளர் அனிருத் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று ’தர்பார்’ படத்தின் சிங்கிள் பாடலான ’சும்மா கிழி’ என்ற பாடல் வெளியாகி இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் இந்த பாடல் சர்ச்சைக்குரிய வகையில் சிலரால் விமர்சனம் விமர்சனம் செய்யப்பட்டு வந்த போதிலும் இன்னொரு பக்கம் இந்த பாடல் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது

இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சற்றுமுன் ’சும்மா கிழி’பாடல் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாகவும், இதுதான் தலைவரின் அன்பு சாம்ராஜ்யம் என்றும், தமிழ் திரைப்படத்தின் பாடல் ஒன்று 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது இதுதான் முதல் முறை என்றும் குறிப்பிட்டுள்ளார்

ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.