தேர்தலுக்குப்பின் லாக் டவுனா? விளக்கம் அளிக்கும் பிரத்யேக வீடியோ!
- IndiaGlitz, [Wednesday,March 17 2021]
இந்தியாவில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும் குஜராத், மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு 800 ஐ தாண்டி எகிறி வருகிறது. இதனால் தமிழக அரசு முகக்கவசத்தை கட்டாயமாக்கி மீண்டும் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
இத்தகைய சம்பவங்களால் தமிழகத்தில் தேர்தலுக்குப் பின் லாக் டவுன் போடப்படுமா? என்ற கேள்வியும் அழுத்தமாக வைக்கப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விக்கு இன்று காலை தமிழக சுகாதாரத்தறை செயலாளர் பதில் அளித்து இருந்தார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? இந்தியாவோடு மற்ற ஐரோப்பிய நாடுகளை பொருத்திப் பார்க்கும்போது நிலைமை முற்றிலும் மாறுபடுமா? கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு லாக் டவுன் அவசியமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு சுமன் சி.ராமன் அவர்கள் நமக்கு பிரத்யேக நேர்காணல் அளித்து உள்ளார்.
இந்த நேர்காணல் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து இருக்கும் இந்த சூழலில் மிகவும் கவனம் பெற்று இருக்கிறது. இந்தியாவில் சில மாநிங்களில் இப்போது இரவு நேர லாக் டவுன் போடப்பட்டு உள்ள நிலையில் தமிழகம், பெருகி வரும் கொரோனாவை எப்படி எதிர்கொள்ள போகிறது? இந்த கொரோனா பெருக்கத்தால் உயிரிழப்பு மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? என்பது போன்ற பல்வேறு முனை கேள்விகளை அலசி ஆராய்ந்து சுமன்சி.ராமன் அவர்கள் நமக்கு பதில் அளித்து உள்ளார். இந்த நேர்காணல் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.