கருணாசுக்கு தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும்: அதிமுக எம்எல்ஏ சவால்


Send us your feedback to audioarticles@vaarta.com


சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய காமெடி நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ், 'நான் அடிப்பேன் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பயந்தார்' என பேசினார். அவருடைய இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கருணாசின் வன்முறையை தூண்டும் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த சூலூர் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ், 'முதல்வர் பழனிச்சாமி ஏசுநாதர் போல, அடித்தால் வாங்கிக் கொள்வார். கருணாசுகுத் தைரியம் இருந்தால் என்னை அடிக்கட்டும் என்று சவால் விடுத்தார். மேலும் கருணாஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் கருணாசை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் எந்த நேரத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments