தமிழை முந்தியது தெலுங்கு 'சுல்தான்': முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களின் தயாரிப்பில் உருவான ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென திரையரங்கு மூடப்பட்டது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்று பல ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சுல்தான் படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதே போல் தமிழிலும் மிக விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால், நெப்போலியன், அபிராமி, யோகிபாபு, பொன்வண்ணன், சதீஷ், சிங்கம்புலி, செண்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.