தமிழை முந்தியது தெலுங்கு 'சுல்தான்': முக்கிய அறிவிப்பு!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அவர்களின் தயாரிப்பில் உருவான ’சுல்தான்’ திரைப்படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென திரையரங்கு மூடப்பட்டது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த படத்தை பார்க்க முடியவில்லை என்று பல ரசிகர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சுல்தான் படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை முதல் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதே போல் தமிழிலும் மிக விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, லால், நெப்போலியன், அபிராமி, யோகிபாபு, பொன்வண்ணன், சதீஷ், சிங்கம்புலி, செண்ட்ராயன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளனர்.

More News

அறந்தாங்கி நிஷாவா இது? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பட்டிமன்றங்கள், பேச்சு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு மக்கள் மனதில் பதிந்தவர் அறந்தாங்கி

தமிழ் நடிகையின் பெற்றோருக்கு கொரோனா: ரெம்டிசிவிர் மருந்து தேவை என கோரிக்கை

பிரபல தமிழ் நடிகை ஒருவரின் பெற்றோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ரெம்டிசிவிர் மருந்து தேவை என தனது சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்

ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி: காளி வெங்கட் டுவிட்

தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவரான காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் நிறைவு, ஆழமான, தரமான, நுணுக்கமான, வேலை செய்த மகிழ்ச்சி, நன்றி இயக்குனர் பா ரஞ்சித் என தனது

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான நில அதிர்வு!

திருநெல்வேலி மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளான கூடன்குளம், கூட்டப்புளி, ராதாபுரம்,

வரலாற்று ஆசிரியர்களே முகம் சுளிக்கும் அரசன் காலிகுலா கதை… ஆடியோ வடிவில்!

ஜுலியஸ் சீசரின் அடையாளமாகப் பெயர்ப்பெற்ற ரோம மன்னன் ஒருவரை வரலாற்று ஆசிரியர்கள் பலரும் காலிகுலா என்றே அழைக்கின்றனர்.