படத்தை விட விமர்சனத்தில் தான் வன்முறை அதிகம்: 'சுல்தான்' எடிட்டர் ஆதங்கம்!
- IndiaGlitz, [Thursday,April 08 2021]
சினிமா விமர்சனம் என்ற பெயரில் அனைத்து திரைப்படங்களையும் மோசமாக நெகட்டிவ்வாக விமர்சனம் செய்து பிரபலமடையும் ஒரு சிலர் இருப்பதை அடுத்து ’சுல்தான்’ பட எடிட்டர் இது குறித்து தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்
சமீபத்தில் வெளியான ’சுல்தான்’ திரைப்படத்தில் வன்முறை அதிகமாக இருந்ததாக சென்சார் அதிகாரிகள் கூறியதை அடுத்து அந்த படத்தின் வன்முறையை நாங்கள் குறைத்தோம் என்றும், ஆனால் படத்தில் உள்ள வன்முறையை விட விமர்சனத்தில் தான் அதிக வன்முறை இருந்தது என்று ’சுல்தான்’ படத்தின் வெற்றி விழாவில் எடிட்டர் ரூபன் குறிப்பிட்டுள்ளார்
அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘ஒரு சில விமர்சகர்கள் பயன்படுத்திய வார்த்தைகளில் வன்முறை மிக அதிகமாக இருந்தது என்றும், ஆனாலும் அவ்வாறு ஒரு சிலர் மட்டுமே இருந்தது இருந்தார்கள் என்றும் அது ரொம்பவே எங்களை காயப்படுத்தியது என்றும் அவர் கூறினார்
படத்தை எடிட் செய்த எனக்கு விமர்சனத்தை எப்படி எப்படி நீக்குவது என்று தெரியவில்லை என்றும் இன்று திரையரங்கிற்கு வந்து சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில் நெகட்டிவ் விமர்சனங்களும் ஒரு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் இந்த தருணத்தில் தான் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புவதாகவும் எனக்கு எனது அம்மாவை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு சினிமாவை பிடிக்கும் என்றும் எங்கள் அம்மா எப்படி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேனோ, அதேபோல் சினிமாவும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் எனவே விமர்சனத்தில் வார்த்தைகளில் வன்மையை குறைத்துக்கொண்டு குறையை மட்டும் சொல்லுங்கள் என்றும் தெரிவித்தார்
மேலும் குறைகளையே சொல்ல வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை என்றும் ரொம்ப எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அடியுங்கள் என்றும், ஆனால் கையை கழுவிட்டு அடியுங்கள் என்று தான் சொல்கிறேன்’ என்றும் எடுட்டர் ரூபன் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.