ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் இணைந்த 'சுல்தான்' நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு மொத்த படப்பிடிப்பும் சில வாரங்களில் முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் பல நட்சத்திரக் கூட்டங்கள் நடித்து வரும் நிலையில் தற்போது ’சுல்தான்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் வெளிவந்துள்ளது. ’சுல்தான்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அர்ஜய் என்பவர் ‘அண்ணாத்த’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து அர்ஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியபோது, ‘இந்த படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் அதைவிட முக்கியமாக அவர் எளிமையாக இருப்பதையும் அவரது அபார நடிப்பை நேரில் கண்டு ரசித்தேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்

மேலும் இந்த வயதிலும் அவர் எனர்ஜியுடன் நகைச்சுவை தன்மையுடனும் இருக்கிறார் என்றும் நான் பார்த்த வரையில் மிகவும் நீளமான ஒரு வசனத்தை மிகவும் எளிதாக அவர் பேசி நடித்ததை பார்த்து ஆச்சர்யபட்டேன் என்றும் அன்று இரவு நான் தூங்கவேவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது

டி இமான் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது