அடுத்த ஜென்மம் என்று இருந்தால்.. சகோதரர் மறைவு குறித்து 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகையின் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,March 17 2024]

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உட்பட பல சீரியல்கள் நடித்த நடிகை சுஜிதாவின் சகோதரரும் பாக்யராஜ் நடித்த ’மௌன கீதங்கள்’ உள்பட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின்னர் இயக்குனர் ஆன சூரிய கிரண் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக காலமானார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சூரிய கிரண் சகோதரி நடிகை சுஜிதா தனது இன்ஸ்டாகிராமில் தனது சகோதரர் மறைவு குறித்து உருக்கமான பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், ‘சூர்ய கிரண் எனது சகோதரன் மட்டுமல்ல, என் அப்பா மற்றும் என் ஹீரோவுமானவர். அவருடைய திறமையும் பேச்சையும் கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன். மறுபிறவி என்பது உண்மையாக இருந்தால் உன்னுடைய கனவுகள், சாதனைகள் அனைத்தும் புதிதாக தொடரட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சுரேஷ் என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகவும், சூரிய கிரண் என்ற பெயரில் இயக்குனராகவும் இருந்த சூரிய கிரண் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மார்ச் 11ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், சின்ன திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களில் மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் சூரிய கிரண் நடித்துள்ளார் என்பதும், அதேபோல் சில படங்களை இவர் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருடங்களுக்கு முன் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சூர்யா கிரண் கலந்து கொண்டார் என்பதும் இவர் நடிகை காவிரியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

5 வருடங்களுக்கு பின் புத்துயிர் பெறும் விஜய் டிவி நிகழ்ச்சி.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் பங்கேற்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் 'குக் வித் கோமாளி' சீசன் 5 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியில் இருந்து நடுவர், தயாரிப்பாளர், இயக்குனர்

அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தில் இணைந்த 'கோட்' நடிகர்.. ஜோடியாக நடிக்கிறார்களா?

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா ஷெட்டி முதல் முதலாக ஒரு மலையாள படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதையும் பார்த்தோம்.

'ஊ சொல்றியா' பாடலில் நடிக்கும்போது பயந்து நடுங்கினேன்.. நடிகை சமந்தா

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் 'ஊ சொல்றியா' என்ற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார் என்பதும் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு அந்த பாடலும்

25 வருட கனவு இன்று நனவாகிறது.. இன்று முதல் பணியை தொடங்குகிறேன்: விஷால் வீடியோ வைரல்..!

25 வருடங்களுக்கு முன் நான் கண்ட கனவு இன்று நினைவாகிறது என்று நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கஷ்டங்கள் தீர்க்கும் பைரவ வழிபாடு!

பைரவர், சிவபெருமானின் கோப உருவமாக வணங்கப்படும் தெய்வம். தீய சக்திகளை விரட்டி, நம்மை துன்பங்களில் இருந்து காப்பாற்றுபவர்.