பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றாரா குத்தாட்ட நடிகை?
- IndiaGlitz, [Tuesday,August 15 2017]
பிக்பாஸ் வீட்டில் இருந்து சக்தி வெளியேறவுள்ளார் என்பதை கடந்த சனிக்கிழமை அன்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி சக்தி ஞாயிறு அன்று வெளியேறினார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய வரவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
தொலைக்காட்சி சீரியல் நடிகை ப்ரியா, பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல குத்தாட்ட நடிகை சுஜயா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், இதுகுறித்து இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் மக்கள் விரும்பும் ஒருவர் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக கமல்ஹாசன் மறைமுகமாக கூறியுள்ளதால் ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.