யாஷிகா வெளியேற்றம் குறித்து சுஜா கூறியது என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாஷிகா வீட்டில் இருக்கும்போதும், வெளியே வந்து கமல்ஹாசனிடம் பேசியபோதும் அவரது பேச்சில் ஒரு முதிர்ச்சி இருந்ததை பார்க்க முடிந்தது. 19 வயதில் இவ்வளவு தெளிவாக, முதிர்ச்சியாக அவர் பேசியது கமல்ஹாசன் உள்பட அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஒருசில நேரங்களில் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டாலும் பெரும்பாலும் அவர்யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் யாஷிகாவின் வெளியேற்றம் குறித்து பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணே தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உங்களது வெளியேற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையில் நீங்கள் ஒரு போராளி, உங்களது மனமுதிர்ச்சியை கண்டு வியக்கின்றேன். நீங்கள் இறுதி போட்டிக்கு செல்ல தகுதியானவர் என்று நான் ஏற்கனவே கூறியிருந்ததை ஞாபகப்படுத்துகிறேன். இருப்பினும் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதை சகஜமாக எடுத்து கொண்ட உங்களுக்கு வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறியுள்ளார்
சுஜாவின் இந்த டுவீட்டுக்கு நன்றி கூறிய யாஷிகா, 'இதுவரை நான் தாக்குப்பிடித்து இருந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். உங்களது ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
Thanks much ❤️ I’m glad I made it so far . Thanks for your support and love. You gave me the support that I much needed ❤️?? https://t.co/tkeISDi7b2
— Yashika Aannand (@iamyashikaanand) September 23, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments